• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஹோட்டல் கட்டணங்கள் திடீரென உயர்வு

ByA.Tamilselvan

Sep 8, 2022

கர்நாடகமாநிலம் பொங்களூரில் வெள்ளபெருக்கு காரணமாக ஹோட்டல் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக பொங்களூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழை சற்றே குறைந்தாலும் நீர் வெளியேற முடியாத நிலை உள்ளதால் மக்கள் கடும் அவதி படுகின்றனர். மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஹோட்டல் அறை எடுத்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சூழலை பயன்படுத்தி சாதாரண ஹோட்டல்கள் கூட அதிக கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. உயர்தர ஹோட்டல்கள் இரவிற்கு ரூ16000+வரி,சாதாரணஹோட்டல்கள் இரவிற்கு 6800+வரி என நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.