விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நாடார் தெருவில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஏர்டெல் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பவம் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்ததனர்.

தீ அடுத்த கட்டிடங்களுக்கு பராவாமல் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக எடுத்த நடவடிக்கை காரணமாக இப்பகுதி மக்கள் தீயணைப்பு நன்றி தெரிவித்தனர்
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.