• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்…

BySeenu

Apr 6, 2024

கோவை வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படும்.

இன்று மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வண்டிகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை)