• Sun. May 5th, 2024

பெரிய பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசம் குறைபாட்டில் பாதிக்கப் பட்டுள்ளனர்-தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கோவையில் பேட்டி

BySeenu

Apr 7, 2024

கோவை ரேஸ் கோர்ஸில் உலக ஆடிசம் தினத்தை முன்னிட்டு 1000″க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வில் கலந்து கொண்டனர்.முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைந்து தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக மேடையில் பொதுமக்களுடன் வைபாக நடனமாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது..,


ஆட்டிசம் குறித்து பெற்றோர்களுக்கு எந்த விதமான விழிப்புணர்வு இல்லை என்றும் ஆட்டிசம் என்பது மன இறுக்க நோய் மனவளர்ச்சி அடையாமல் இருப்பது என்றும்
அதற்காக பயிற்சி கொடுப்பதற்காக மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார். இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடுகள் உள்ளது என்றும் மேலும் அண்டை நாடுகளான அமெரிக்காவில் 38″குழந்தைகளில் ஒருவருக்கு இந்த ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்கள் எந்த விதமான நம்பிக்கை இழக்கக்கூடாது உறுதியாக இருந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகளவில் பெரிய பெரிய அறிவியல் அறிஞர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய சாதனைகயாளர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்றும் பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு நாள் ரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பயணச்சீட்டை தவறவிட்டு தீவிரமாக தேடி வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் நீங்கள் ஒரு அறிவாளி உங்களுக்கு டிக்கெட் தேவையில்லை என்றும் நீங்கள் போகலாம் என்று கூறினர். அதையும் மீறி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விடாமல் டிக்கெட்டை தேடி வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகரிடம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது நான் எங்கு இறங்குவேன் என்று தெரியாது. அதற்காக தான் டிக்கெட்டை தேடி உள்ளதாக கூறினார். இது போல பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நானும் ஆட்டிசம் குறைபாடுகளில் பாதிக்கப்பட்டவன் தான் அதில் உள்ள இன்னல்களைக் கடந்து தற்போது சாதித்துள்ளேன் என தெரிவித்தார் சைலேந்திர பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *