• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
குவைத்தில் இருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 11.05-க்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் குவைத்தில் தரையிறக்கப்பட்டு, கோளாறை சரி செய்த பிறகு மீண்டும் 11.51 மணிக்கு புறப்பட்டது. இதனால், இன்று காலை 6:55 மணிக்கு சென்னை வர வேண்டிய அந்த விமானம், காலதாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் இருந்து புறப்படவிருந்த கோலாலம்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. தற்போது குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்படுவது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல் விமானத்தை இயக்கினால் பல உயிரிழப்புகள் ஏற்பட நேரிடும்.