தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. 70 நாட்களுக்கு மேல் பரவிய இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அனைவரும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது. இருப்பினும் சிலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
அப்படி கடந்த 15ஆம் தேதி, 23 வயதான முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் பூரண குணமடைந்தார். ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு இரண்டு முறை கொரோனா நெகட்டிவ் என்று வந்து பின்னர் வீடு திரும்பிய முதியவர் திடீரென்று மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. இதனை ராஜஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.