காதலியுடன் எடுத்த புகைப்படங்களை போஸ்டர் அடித்து ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மஞ்சுவிளையை சேர்ந்தவர் விஜய்ரூபன். இவர் அங்கு பறவைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்த முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 பெற்று தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், அவர் நான்கு ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் காதலியுடன் எடுத்த புகைப்படங்களை போஸ்டராக அடித்து களக்காடு நகர் முழுவதும் ஒட்டியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை வீட்டின் எதிரிலும் ஒட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள விஜயை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











; ?>)
; ?>)
; ?>)