• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு

ByKalamegam Viswanathan

Jan 21, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 9 நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதலும், 10ம் நாளான இன்று தொடர்ந்து தெப்ப தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலை மூன்று முறை தெப்பத்தை வளம் வந்தவந்தடையும். அதேபோல் இரவு மூன்று முறையும் தெப்பத்தை வலம் வந்து பின்னர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கோவிலுக்கு செல்வார்.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு பால் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிம்மாசனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்று தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் மிதவைத் தேரை வடம் பிடித்து இழுக்க வெப்பத்தேர் தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தது. இதே போல இரவில் மின்ஒளியிலும் தெப்ப தேரில் சுப்ரமணியசுவாமி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி இன்று இரவு தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.