புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை படம் பிடித்து இழுத்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். விராலிமலை முருகன் கோவில் வைகாசி விசாகத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு அருணகிரிநாதருக்கு முருகன் அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்த தலமாகவும் விளங்கி வருகிறது . புராதான பெருமைகள் நிறைந்த இக்கோவிலில் வருடந்தோரும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் விராலிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதியன்று திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலை மாலை இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், நாகம், பூதம், யானை, சிம்மம், வெள்ளி குதிரை மற்றும் பல்லக்கு போன்ற பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று முன்தினம் மாலை முருகன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் தனது மாமன் பெருமாள் வசிக்கும் ஊரான விராலூருக்கு எழுந்தருளி அங்கு மண்டகபடி முடித்து நேற்று அதிகாலை விராலிமலை வந்தடைந்தார். பின்னர் காலை 7.15 மணிக்கு விநாயகர் சிறிய தேரிலும் முருகன் வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினார். காலை சுமார் 09.55 மணிக்கு கொடியசைத்த உடன் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து 4 ரதவீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். பின்னர் பக்தர்களுக்கும், பள்ளி மாணவ மாணவியருக்கும் நீர் மோரும் அன்னதானமும் வழங்கினார்.
தொடர்ந்து தேரானது 1 மணியளலில் நிலையை வந்தடைந்தது நான்கு ரத வீதிகளிலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், பானக்கம், மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.