• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2025

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர், ஆணையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் “மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஒரு சில திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தொய்வாக நடைபெறக்கூடிய அரசு திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் முதன் முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது, உலகெங்கும் இருந்து 29 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளன” என்றார், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வடமாநில விளையாட்டு வீரர்கள் விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பிற மாநில விளையாட்டு வீரர்களை சொல்ல முடியாது.

பிற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் தங்கி படிக்கும் போது அவர்களை விளையாட்டு போட்டிகளில் அனுமதிக்கலாம், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது, விளையாட்டு வீரர்களுக்கான தகுதி, திறமைகள் இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது, மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.