• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெட்டி படுக்கையுடன் வந்த மாணவியர்..,

ByG.Suresh

Jun 2, 2025

கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர்.

அவர்களை சந்தனம் கொடுத்து மலர் தூவி உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. நீண்ட விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் துவங்கி உள்ள நிலையில் வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.

அதனால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான சூழல் அமையவில்லை என்பது சில மாணவர்களின் ஏக்கம் . இருப்பினும் முதல் நாள் என்பதால் உற்சாகத்தோடு மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்கள் பெட்டி படுக்கையுடன் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். மேலும் மழலைப் பிஞ்சுகளும் பள்ளி பருவத்தை தொடங்க உள்ளனர்.