• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு போராட்டம்

ByKalamegam Viswanathan

Dec 4, 2024

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மீது தவறாக பாலியல் புகார் கொடுத்ததாக ஆசிரியர் மூர்த்திக்கு ஆதரவாக பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் விக்கிரமங்கலம் கிராமத்தினர் சார்பாக மூர்த்தி என்பவர் தற்காலிக ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் இருந்து பிளஸ் ஒன் வகுப்பில் இந்த ஆண்டு சேர்ந்த பிரீத்தி என்ற மாணவி ஆசிரியர் மூர்த்தி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் மூர்த்தி ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை அவர் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு நேரில் வந்து இதுகுறித்து மாணவ, மாணவியரிடம் உரிய முறையில் விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி முடிந்த பின்பு பள்ளி வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில் ஆசிரியர் மூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவரால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக 100% பள்ளி சென்டம் வாங்கியது. இதை பிடிக்காத சிலர் அவர் மீது தவறான புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட வருகின்றனர். மூர்த்தி ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை அவரை உடனடியாக பள்ளியில் பணி புரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளியில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.