• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை எதிர்த்து மாணவிகள் போராட்டம்

ByIlaMurugesan

Nov 19, 2021

திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி தாளாளர் ஜோதி முருகன்

பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தாளாளர் ஜோதிமுருகன் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பழனி சாலை அருகே உள்ள அழகுப்பட்டி கிராமம் செல்லும் சாலையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக அனைத்து மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

இதனை அடுத்து கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளை சமாதானப் படுத்தியும் கேட்கவில்லை. பின்னர் வந்த போலீசார், இது தொடர்பாக கல்லூரி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.