• Mon. May 20th, 2024

பிரான்ஸ் நாட்டின் மாணவர்கள் கோவை இந்தியன் பள்ளி மாணவர்களோடு கலாச்சாரம், கல்வி…

BySeenu

Nov 9, 2023

தீபாவளி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தி இந்தியன் பப்ளிக் பள்ளி நமது மாணவர்களுக்கு முழுமையான மற்றும் முற்போக்கான கல்வியை வழங்க உறுதி பூண்டுள்ள ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகும்.நாங்கள் நவீன உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு எங்கள் மாணவர்களைத் தயார்படுத்த உலகளாவிய விழிப்புணர்வு, நற்பண்புகளை மேம்படுத்துதல் மற்றும் கல்வி வளர்ச்சி போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

மேலும் எம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கான வழிகளுள் ஒன்றாக மாணவப் பரிமாற்றத் திட்டத்தை TIPS உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியின் தொடக்கமாக, ரீயூனியன் தீவுகளைச் சேர்ந்த மாணவர்களை 10 நாட்கள் பரிமாற்றத் திட்டத்தின் வாயிலாக நம் பள்ளிக்கு அழைத்து, இந்நிகழ்வை ஏற்று நடத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, TIPS மாணவர்கள் ரீயூனியனுக்கு தங்களது பயணத்தை மேற்கொள்வார்கள், அங்கு அந்த அழகான தீவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள் மேன்மை அடைவார்கள்.

நவம்பர் 2, 2023 அன்று அவர்கள் பள்ளிக்கு வருகை தந்தபோது போது மனப்பூர்வமான இந்திய பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டனர். மரியாதை மற்றும் ஆசீர்வாதத்தின் அடையாளமாக அவர்களின் நெற்றியில் குங்குமத் திலகமிடப்பட்டது, இத்தோடு புத்துணர்ச்சியூட்டும் தொடக்கத்திற்காக இளநீர் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, அவர்களின் கால அட்டவணை பள்ளியின் கால அட்டவணையுடன் சீராக ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்கள் கல்வி கற்றல் செயல்பாடுகளுடன்,பல்வேறுப்பட்ட அனுபவங்களையும் பெற்றனர்.

இந்த பயணம் எங்கள் மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், எண்ணற்ற வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மேலும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் சேர்மன் அசோக்குமார் தலைமை செயல் அலுவலர் தாரா மோகன் மற்றும் ஆசிரியர்கள் பிரான்ச் நாட்டின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *