மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், அக்கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய போது, மிகப்பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அக்கல்லூரி வளாகத்தினுள் பிறந்தநாள் விழாவிற்காக கொண்டாடிய மாணவன், சக மாணவர்களுக்கு மது விருந்து அளித்த காட்சியும் வீடியோவில் வைரல் ஆகி உள்ளதால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
