புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரி அறுவை சிகிச்சை பிரிவில் படித்து முடித்த 17 மாணவர்களுக்கு மதிப்பின் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை மூன்று மாதங்களாக கல்லூரி நிர்வாகம் வழங்காமல் உள்ளதால் இன்று மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தனியார் செவிலியர் கல்லூரி வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை செய்து தங்களது சான்றிதழை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் தனியார் செவிலியர் கல்லூரி குறித்து இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்தால் மட்டுமே தங்களது சான்றிதழை தர முடியும் என்று கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து தெரிவிப்பதாக அறுவை சிகிச்சை பிரிவு மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.








