மதுரை உத்தங்குடியில் உள்ள கே.எம்.பார்மஸி கல்லூரியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக எய்ட்ஸ் தினம் கடைபிடித்தல் நிகழ்ச்சி டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்பு லோகோ செஞ்சுருள் வடிவத்தில் மாணவ மாணவிகள் சிவப்பு நிறத்தில் பலூன்கள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்விழாவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் சுந்தர பாண்டியன், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஜெகன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.





