மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயமடைந்த CCTV காட்சிகள்
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மதுரை என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகன் துரையரசன் (வயது 20) என்ற பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் நாகமலை புதுக்கோட்டை – கீழக்குயில்குடி சந்திப்பு அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட துரையரசன் படுகாயம். அருகிலுள்ளவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பைக் மீது தனியார் பஸ் மோதியதில் மாணவன் துரையரசன் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி – கல்லூரி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
குறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.