காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூனில் அமைந்திருக்கும் ரீஜினல் பெர்பெஃக்ட் மேல் நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு GNS ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்ற மாறுவேட போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் தமிழ்மாறன் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை வாழ்த்தி பரிசு பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இயற்கை மற்றும் விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நமது பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையிலும் , விடுதலை போராட்ட வீர்களின் தியாகம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் அருட் செயல் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் மாணவ மாணவியர்கள் மாறுவேடத்தில் பங்கேற்றனர். இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் திருமதி நோயளா செபஸ்டின் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.