• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை..,

ByS.Navinsanjai

May 17, 2025

ஆந்திரபிரதேசம்-சித்தூர் -முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்.இளங்கோவன் தற்போது திருப்பூர் மாவட்டம் -இடுவாய் அருகே உள்ள தனியார் சைசிங் கம்பெனியில்  வேலை செய்து வருகிறார்.

இளங்கோவனின் மகள் அஸ்வினி(16) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் அஸ்வினி-யின் அப்பா இளங்கோவன் வேலை செய்யும் கிராமமான இடுவாய் -சீரங்ககவுண்டம்பாளையத்திற்கு வந்துள்ளார்.அஸ்வினி நேற்று  11-ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். 247 மதிப்பெண்கள் பெற்ற அஸ்வினி வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெறாததால் அஸ்வினி அழுது கொண்டிருந்தார்.இதற்கு அஸ்வினி-யின் அம்மா மீண்டும் துணைத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என ஆறுதல் கூறி உள்ளனர்.

அஸ்வினி-க்கு ஆறுதல் கூறிவிட்டு அவருடைய பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டில் அஸ்வினி-யை காணவில்லை. அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே அஸ்வினி-யின் செருப்பு மட்டுமே இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்திற்கும் , திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையில் 5 வீரர்கள் கிணற்றில் அஸ்வினி-யை தேடினார்கள். 3 மணி நேரம் போராடி அஸ்வினி -யை சடலமாக மீட்டனர்.பின்னர் அஸ்வினி-யின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.