முதல்வர் வருகையான இன்று, பகுதி நேர ஓவிய ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள திருப்பெயர் கிராமத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள நிலையில் இன்று வேப்பூர் அடுத்துள்ள கண்டபங்குறிச்சியில் செல்போன் டவரில் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பணி புரியும் சேரன் என்பவர் ஏறிக் கொண்டு பணி நிரந்தரம் செய்ய கோரி, செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் . திட்டக்குடி துணை கண்காணிப்பாளர் மோகன் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு இறங்கினார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

