அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை அமைக்கப்பட வேண்டும் கல்வித் தகுதிக்கு ஏற்ப ரேஷன் கடையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

ஊதியக்குழு அமைத்து ஊதிய மாற்றக் குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.