விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சாத்தூர் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று சிலர் பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து மாரியம்மன் கோவில், பஜார், பஸ் ஸ்டாண்ட், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், ஏழாயிரம் பண்ணை போலீஸ் ஸ்டேஷன்வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் இருபுறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளின் மேற்கூறைகள் அகற்றப்பட்டன.
மேலும் சாக்கடை கழிவு நீர் மீது படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தது 20 வீடுகளில் படிக்கட்டுகள் முழுமையாக நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி எந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தினார்.

பாதுகாப்பு பணியில் சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் வெப்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் ஏழாயிரம் பண்ணை சப் இன்ஸ்பெக்டர் பாலு உள்ளிட்ட கூடுதல் போலீசார் ஈடுபட்டனர்.