காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதமானது எனவும், இதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய சட்ட மீறலுக்காக பெற்றோர் மீது ₹25,000 அபராதமும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
சாலை விபத்துகளைத் தடுக்கவும், சிறார்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகள் வாகனம் ஓட்டுவதை அனுமதிக்கக் கூடாது எனவும் காரைக்கால் காவல்துறை அறிவித்துள்ளது.











; ?>)
; ?>)
; ?>)