• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வலிமை படத்தை வச்சு செஞ்ச தணிக்கை குழு

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன், ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ், சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 13 அன்றுவெளிவருவதாக இருந்த படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தணிக்கை சான்றிதழ் வழங்க படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்குுுU/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். என்றாலும் 15 காட்சிகளில்திருத்தம் செய்ய கூறியிருக்கிறது.அதன் விபரம் வருமாறு

  1. படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டு ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.
  2. விலங்குகள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கபடாத காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.
  3. தங்கசங்கிலி பறிப்பு நிகழ்வின் போது சாலையில் ஆட்டோவில் இருந்து குழந்தையுடன் ரோட்டில் விழும் பெண்ணின் காட்சி நீக்கப்பட வேண்டும்.
  4. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் சில நீக்கப்பட வேண்டும், சில நீளம் குறைக்கப்பட வேண்டும்
    .
  5. ‘வக்காலி’ எனும் வார்த்தையை மவுனிக்க வேண்டும்
  6. சண்டை காட்சியில் கீழே விழும் நபரின் ரத்தம் தரையில் பரவும் காட்சியை நீக்க வேண்டும்.
  7. ஒரு நபரை கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட வேண்டும்
  8. கப்பலில் ஒரு நபரை கொல்லும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
  9. ….த்தாஎனும் வார்த்தை வரும் காட்சிகளில் அந்த வார்த்தை நீக்கப்பட வேண்டும்.
  10. நடுவிரலை காட்டும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
  11. போலிசின் நெஞ்சில் கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட வேண்டும்
    .
  12. கட்டுமான பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சியின் நீளம் குறைக்கப்பட வேண்டும்.
  13. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் டிஸ்க்லைமர் பெரிய எழுத்தில் போட வேண்டும்.
  14. போதை பொருள் உட்கொள்ளும் காட்சியை நீக்க வேண்டும்.
  15. கடவுள் தான் நிஜ சாத்தான் எனும் வார்த்தை நீக்கப்பட வேண்டும்.