ஹோட்டல் பெமினாவில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூன்றாம் ஆண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிலம் குறித்த வகைகள் பற்றியும் ஆவணங்கள் பற்றியும் பேசப்பட்டது.மேலும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பிரச்சனைகள் பற்றியும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீண்டாமை மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் பொது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் தேனி மாவட்டம் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் உட்பட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.