சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சகாரியா.இவர் கடந்த 30.12.2024 அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவமனை வளாகத்தின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வாகனம் மாயமானது இருந்ததால் அதிர்ச்சடைந்தார்.
பின்னர் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து வாகனத்திருட்டியில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்நிலையில் தாம்பரம் சானடோரியம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடுவதற்கு தயாராக இருந்தார் அப்பொழுது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் திருநெல்வேலியை சேர்ந்த மாரிராஜ் (எ) மாரி (வயது-32) என்பதும் தற்போது கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த வந்தபோது பழைய இரு சக்கர வாகனத்தை குறைந்த விலைக்கு வாங்கி ஒரு மணி நேரத்தில் வாகனத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்று விடுவார்,இதில் அதிக லாபம் கிடைத்ததால் அவர் கடந்த 2023ம் ஆண்டிலிருந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும், இருசக்கர வாகனங்களை திருடி அதில் பழைய வாகனங்களை அவருக்குத் தெரிந்த பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தும் நபர் ஒருவரிடம் ஒரு வாகனம் 20 ஆயிரம் ரூபாய் என ஸ்க்ராபுக்கு விற்பனை செய்ததும், நன்றாக இருக்கும் இருசக்கர வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.


இதனை தொடர்ந்து தாம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் திருடிய 10,இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஸ்கிராப்காக விற்பனை செய்த மூன்று இருசக்கர வாகனங்களுக்கு தலா 20 ஆயிரம் என 60 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.