• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தென்மாவட்டங்களில் ஆவின்பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை..!

Byவிஷா

Dec 18, 2023

தென்மாவட்டங்களில கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.