விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்தது கீழ கோதை நாச்சியார்புரம் கிராமம். இங்கு குடிநீருக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் நீர் ஏற்றப்படாமல் பல மாதங்களாக கண்காட்சி பொருளாக இருந்து வருகிறது.

இதனால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)