எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வர்த்தக அணி மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது..
வர்த்தக அணியின் மாநில தலைவர் அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இதில், மாநில பொது செயலாளர் முபாரக் அலி ,மாவட்ட செயலாளர் கோவை கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

செயற்குழு கூட்டத்தில்,தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த வர்த்தகர்கள் நலன்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது..
கூட்டத்தில், அமெரிக்கா நாட்டின் வரி விதிப்பால்,இந்தியாவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நாட்டின் சர்வாதிகார ஊகாதிபத்திய போக்கை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தக அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா,தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வர்த்தகர்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்..
தொடர்ந்து பேசிய அவர்,தமிழகத்தில் பெருநகரங்களில் இரவு நேர கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில்,காவல் துறையினர் தொடர்ந்து அனுமதி மறுப்பதாகவும்,எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் சின்ன வெங்காயம்,பால்,மக்காச்சோளம் போற்ற பொருட்கள் அதிகம் உற்பத்தியாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பொருட்களை வெளி சந்தைகளுக்கு கொண்டு செல்ல சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பி இருப்பதால் ஏராளமான சிரமங்கள் இருப்பதாகவும், எனவே அரியலூர்,பெரம்பலூர் வழியாக நாமக்கல் வரை இரயில் இருப்பு பாதை அமைத்து கொடுத்தால் அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் வர்த்தகர்கள் பயன் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்..
கல்வி கற்க பள்ளி செல்லும் மாணவர்கள் எடுத்து செல்லும் புத்தக பைகளுக்கு உள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி.வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்..
கூட்டத்தில், மாநில மாவட்ட நிர்வாகிகள் அஜ்மல் கான்,லோகநாதன்,அன்சாரி,குடந்தை இப்ராஹீம்,சாதிக் பாட்ஷா,நூருல்லா,மன்சூர்,அன்சர்,அபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.






