• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லைப்-க்கு அர்த்தம் குடுத்திருக்காங்க – விக்னேஷ் சிவன்!

இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் பரவலான பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நயன்தாரா புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பெண்கள் ஆண்களை உருவாக்குவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்களால் மட்டுமே ஆண்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளுமே பெண்களுக்கானது என்றும் குறிப்பிட்டுள்ளார். வார்த்தைகளால் கூறுவதை காட்டிலும் அவர்களின் இருப்பை அழகாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து வலிமையான, அழகான அதிசயத்தக்க பெண்களுக்கும் தனது பெண்கள் தின வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.