• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி

Byவிஷா

Dec 3, 2024

தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஜன.29 முதல் பிப்.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் டிச.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் அனைத்து தபால்தலை சேகரிப்பு அலுவலகங்களில் கிடைக்கும். மேலும், https://tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.