• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான 6 வயது முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கராத்தே போட்டி..,

ByKalamegam Viswanathan

Dec 11, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உலக ஷோட்டா கான் கராத்தே பெடரேசன் - இந்தியா சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.  இப் போட்டியில் ஆறு வயது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.இதில் மாணவியர்கள் தன்னார்வத்துடன் தற்காப்பு கலையான கராத்தே போட்டிகளை பயின்று , ஆண்களுக்கு நிகராக பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அதிவேகத்தில் கராத்தே கலையை வெளிப்படுத்தினர்.
ஆறு வயது கொண்ட சிறுவர்கள் தற்காப்பு கலையான கராத்தே - யை அனைவரின் மத்தியில் செய்து காண்பித்தது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தன .  இதில் கலந்துகொண்டு சிறப்பாக போட்டியில் பங்கு பெற்ற மாணவ , மாணவியர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவும் நிகழ்ச்சி  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.