மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினுடைய மாவட்ட பொதுக்குழு, மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தொழுகை பள்ளியில் மாவட்டத்தினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து மாநில செயலாளர் அப்துல் ஹமீது செய்தியாளர்களிடம்கூறுகையில்
தற்போது இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பொதுக்குழுவில் மிக முக்கியமாக மூன்று தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்ற உள்ளோம்.

முதலாவதாக, இஸ்லாமியர்களினுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக்கூடிய தனி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை இதன் மூலமாக வைக்கப்படுகிறது. 3.5\% இடஒதுக்கீடு என்பது இஸ்லாமிய மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை, அதை குறைந்தபட்சம் 7\%-மாக உயர்த்தி தர வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்கின்ற வாக்குறுதியை வழங்கியிருக்கிறீர்கள் என்கின்ற ஒரு விஷயத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்திற்கு நாங்கள் ஏற்கனவே சில முறை நினைவுறுத்தி இருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் அவர்களும் அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். ஆகவே அந்த அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர், குறைந்தபட்சம் ஏற்கனவே எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 5\%-மாவது முதற்கட்டமாக உயர்த்தித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாங்கள் இதன் மூலமாக வைத்துக் கொள்கிறோம். இது முதலாவது
இரண்டாவது மிக முக்கியமான கோரிக்கை, இந்த தமிழக சட்டசபையில் சுமார் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஏழே ஏழு பேர் தான் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். அப்போ அது வெறும் 3\%. இப்போ தமிழகத்தில் ஏறக்குறைய 10\% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அப்படின்னா ஒரு 23 பேராவது சட்டசபைக்குள்ள இருக்கணும். அதற்கு காரணம் அவர்கள் இல்லாமல் போனதற்கு காரணம் அரசியல் கட்சிகள் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம். அப்போ அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து வேட்பாளர்களை அறிவிக்கக்கூடிய நேரத்தில் ஜனநாயக சக்திகளும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் தங்களுடைய வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 10\%-த்தையாவது இஸ்லாமியர்களாக அறிவிக்க வேண்டும். உங்கள் கட்சியில் உள்ளவர்களை, இஸ்லாமியர்களை நீங்கள் அறிவிக்க வேண்டும், அதன் மூலமாக சட்டசபையில் பெருவாரியான 10\%-திற்கு நிகரான இஸ்லாமிய

வேட்பாளர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆகவே அதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை ஜனநாயக சக்திகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் வைத்துக் கொள்கிறோம். இது இரண்டாவது கோரிக்கை.
மூன்றாவதாக தமிழக சிறைகளில் நீண்ட காலமாக இஸ்லாமிய சிறைவாசிகள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். வழக்கமாக நீண்ட காலம் சிறையில் இருக்கக்கூடியவர்களை, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு என்று கருணையின் மூலமாகவும் அவருடைய உடல்நிலையை கவனித்தும் பல சலுகைகள் வழங்கப்படுகிறது, அதில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சிறைவாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். நாம் கேட்பது சலுகை இல்லை, கருணையின் அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு மற்ற மதங்களைச் சார்ந்தவர்களும் ஜாதியைச் சார்ந்தவர்களும் எவ்வாறு விடுதலை செய்யப்படுகிறார்களோ அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் மீதம் இருக்கக்கூடிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். ஏற்கனவே ஒரு சிலரை திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் விடுதலை செய்திருக்கிறது அதற்கு நன்றி. மீதமும் இருக்கக்கூடிய தகுதியுடையவர்களை விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்துக் கொள்கிறோம். இது தமிழக அரசுக்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய மூன்று கோரிக்கைகள்
நான்காவதாக UGC என்று சொல்லப்படக்கூடிய அமைப்பின் சார்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது, அதை உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது. Equality என்பதை உறுதி செய்வதற்காக பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படக்கூடிய கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக அதை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட வேண்டிய அந்த சென்டரை தடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஏறக்குறைய 90-க்கும் அதிகமான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இறந்து போயிருக்கிறார்கள், தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அங்கே நிலவக்கூடிய ஜாதிய வேற்றுமை, உயர் ஜாதியைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தம். ரோகித் வெமுலாவிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மரணத்திற்கு காரணமான இந்த ஜாதிய பாகுபாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான இந்த அமைப்பு, ‘Equal Opportunity and Equality Centre’-ஐ உடனடியாக அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

என்கின்ற கோரிக்கையும் இதன் மூலமாக நாங்கள் வைத்துக் கொள்கிறோம்.
இரண்டாவது கோரிக்கையா முதலமைச்சரை சந்திப்பீங்களா? இஸ்லாமியர்களுக்கு நிறைய விஷயங்கள் செஞ்சுட்டு இருக்காங்க, முதலமைச்சரை சந்திப்பீங்களா
இது ஏற்கனவே நாங்க கோரிக்கையா வச்சிருக்கிறோம். சமீபத்துல திமுக-வினுடைய அந்த கோரிக்கைகளை கவனிக்கக்கூடிய சகோதரி கனிமொழி அவர்களுடைய குழுவை நேரில் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்க கொடுத்திருக்கிறோம். முதலமைச்சரிடமும் ஏற்கனவே இடஒதுக்கீடு சம்பந்தமாகவும் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாகவும் அரசியல் பிரதிநிதித்துவம் சம்பந்தமாகவும் ஏற்கனவே நாங்கள் கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.
திமுக வந்து தேர்தல் அறிக்கையிலேயே சொன்னாங்க, 10 ஆண்டுகளுக்கு மேல சிறையில் உள்ளவங்களை வந்து விடுதலை பண்றோம்னு சொன்னாங்க. அந்த 520 விதிமுறைகள்ல இதும் ஒன்னு இருக்கு. நீங்க எதும் அழுத்தம் குடுக்குறீங்களா
அழுத்தம் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே அவர்கள் விடுதலை செய்திருக்கிறார்கள். இன்னும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள், அதற்கான அழுத்தம் எங்களின் சார்பாக கொடுக்கப்படுகிறது. இது என்ன விஷயம்னா ஆளுநருடைய காரணத்தைக் காட்டி சில விஷயங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. ஆளுநர் சொல்லாத, செய்யாத விஷயங்களையெல்லாம் சட்டப்பூர்வமாக எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போராடுகிறது. இப்போ அந்த பல்கலைக்கழகங்களினுடைய துணைவேந்தர்களை நியமிப்பதற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டார்,
அதை எதிர்த்து வழக்கு தொடுத்து உயர்நீதிமன்றத்தில் ஜெயித்தது, அதை மீண்டும் உயர்நீதிமன்றம் தடுத்ததற்குப் பிறகு இப்போ உச்சநீதிமன்றத்துல ஜெயித்து மீண்டும் அந்த உரிமையை நிலைநாட்டி இருக்கிறது. அவ்வாறு மாநில அரசாங்கத்திற்கு முதல்வருக்கு இருக்கக்கூடிய உரிமைகளில் ஆளுநர் தலையிட்டால் எவ்வாறு இதற்கு முன்னர் கையாண்டதோ அதை இஸ்லாமிய சிறைவாசிகளுடைய விஷயத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம்
இப்போ வந்து சிறுபான்மையினர் நலனுக்காக நீங்க வந்து 23 தொகுதி கேக்குறீங்க. ஆல்ரெடி வந்து எல்லா கட்சிகள் இருக்கு, கூட்டணியில வந்து அதிகமான தொகுதிகள் கொடுக்குறதுல சிரமங்கள் இருக்குமே
இப்போ திராவிட முன்னேற்றக் கழகத்துகிட்ட இந்தக் கேக்குறது அல்லது மற்ற கட்சிகள்ட கேக்குறது எங்களுக்காக கேக்கல.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியலில் நிற்கப்போவது கிடையாது, நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப்போவதும் இல்லை, MLA, MP-களாகப் போவது இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் காலம் காலமாக ஏராளமான இஸ்லாமியர்கள் இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆரம்பகால பொருளாளராக சாதிக் என்கின்ற ஒரு பொருள் இருந்தார். ஹனீபா மாதிரியான, நாகூர் ஹனீபா மாதிரியான மிகப்பெரிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் இருந்தார்கள். நிறைய அரசியல் தலைவர்கள் இருந்தார்கள். இப்போ நீங்க பாத்தீங்கன்னா அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள்.
அவர்கள் கட்சியினுடைய கொள்கை அது நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம், ஆனால் அதை நம்பக்கூடிய இஸ்லாமியர்கள் அங்க இருக்கிறாங்க. விடுதலைச் சிறுத்தைகளில் இருக்கிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருக்கிறார்கள், காங்கிரசில் இருக்கிறார்கள். அப்போ ஒவ்வொருத்தரும் அவங்களுக்கான அந்த வேட்பாளர் நிறுத்தும்போது இந்த விஷயத்தை மனதுல வைக்கணும். எப்படி ஒரு தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு கொடுக்கணுமோ,
இந்தியா சுதந்திரமடைந்தபோது மெட்ராஸ் பிரசிடென்சியாக இருக்கக்கூடிய நேரத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த இஸ்லாமிய வேட்பாளருடைய எண்ணிக்கையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் 20 – 25 சதவீதத்துக்கு அதிகமாக இருந்துச்சு. நாலு பேரில் ஒருவர் இருந்தார்கள். சில நேரங்களில் அதிகமாகக் கூட இருந்துச்சு.
தமிழகத்தினுடைய உள்துறை அமைச்சராக ஒரு இஸ்லாமியர் இருந்தார், உஸ்மான் என்று சொல்லக்கூடிய ஒரு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் இருந்தது. அப்போ நீதிக்கட்சியின் வழி வந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் இதைக் கூடுதலாக கவனிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம்.










