தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு 2 நாட்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் முதல்நாளான இன்று பொதுமாநாடு, ஊர்வலம், பி்ரதிநிதிகள் மாநாடு் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. பொது மாநாட்டு முதல் நாள் நிகழ்வு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தமிழரசு தலைமையில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல் நாள் நடைபெற்ற பொது மாநாட்டு நிகழ்வில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 9 ஆவது மாநில மாநாட்டில் தமிழகத்திலுள்ள மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து “தமிழ்நாடு வங்கி” யை உருவாக்கிட வேண்டும், நகரக் கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும்,்அரசு தள்ளுபடி கடன்தொகைகளை வட்டியுடன் காலதாமதமின்றி வழங்கிட வேண்டும், அரசின் நிதிகளை கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை அமைத்திட வேண்டும், கருணை ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 10 ஆயிரமாக உயர்த்தி பஞ்சப்படியுடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் பேசியபோது :
இந்த மாநாட்டில் கேரளவைப் போல தமிழகத்திலும் மாவட்ட வங்கிகளை இணைத்து மாநில வங்கி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறப்பான கோரிக்கை எனவும்,

நிதி அமைப்புகள் கார்ப்பரேட்டின் நலன்களுக்காக அரசங்கத்தால் மாற்றப்பட்டுகொண்டே இருக்கிறது., ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றால் அந்த கூட்டத்தொடரில் ஒரு பொதுத்துறை நிறுவனமோ, வங்கியோ, இன்சுரன்ஸோ காலியாகிருக்கும், ஒரு கூட்டம் நடந்தால் ஒரு ரத்தத்தையாவது குடிக்காம தாங்க முடியாது, 70 வருடம் கட்டிகாப்பாற்றியதில் ஒரு அமைப்பின் கழுத்தையாவது அறுத்து அதானிக்கும் அம்பானிக்கும் அபிஷேகம் செய்யவில்லை என்றால் அந்த அமர்வின் பலன் போகாது எனவும்,
இருப்பதை கபளிகரம் செய்ய அமித்ஷா கொண்டுவந்த கூட்டுறவு வங்கிகளுக்கான சட்டத்தை நிறைவேற்றியபோது இந்தியாவிற்கே மாடலாக முன்மாதிரியாக கேரள அரசு மாநில வங்கியை உருவாக்கியது. கேரளாவில் அரசுடமை வங்கிகளுக்கு மேலாக கேரள அரசின் மாநில வங்கிகள் வரவுசெலவு நடக்கிறது. ஆனால் இதனை ஏன் தமிழ்நாட்டில் நடத்த முடியாது என கேள்வி எழுப்பினார்.




