• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தொடரும் நட்சத்திர விவாகரத்துகள்! காரணம் என்ன?

இணையத்தில் சமீபத்திய ஹாட் டாபிக், தனுஷ் , ஐஸ்வர்யா விவாகரத்து! 18 வருடங்களாக இணைந்து இருந்த இந்த தம்பதி, தங்களது விவாகரத்தை தங்களது இணைய பக்கத்தில் அறிவித்திருந்தனர்.. இவர்களது விவாகரத்து குறித்து, பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன..

இந்நிலையில் தற்போது,
சமந்தா பாணியில் நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி உள்ளார்.

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக பரபரப்பான வதந்திகள் பரவி வந்தன. எனினும், சிரஞ்சீவியும் அவரது மகள ஸ்ரீஜாவும் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌமாக இருந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவர் பெயரை நீக்கி உள்ளார். இதனால் இவர்களின் பிரிவது உறுதியாகிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

கோலாகலமாக நடந்த திருமணம்!

2016ம் ஆண்டு ஸ்ரீஜா – கல்யாண் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு, நவிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஸ்ரீஜா கல்லூரியில் படிக்கும் போது சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் அவரது மாமியார் வரதட்சணை கேட்பதாகக் கூறியதை அடுத்து, சட்டப்பூர்வமாக சிரிஷ் பரத்வராஜிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அவர்களுக்கு நிவிரிதி என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

////

கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார், சமந்தா..

இந்நிலையில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்து ரசிகர்கள் மனதில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

சமீபகாலமாக நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்துகள் அதிகரித்து வருகிறது… பெரும் பேரும் புகழும், அதிக பணமும் தான் இந்த பிரிவினைக்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்…

மேலும், தனிமையை பெருமையாக நினைக்கும் நிலை தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதால் தான் இந்த பிரிவினைக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால், இதனால் பின் காலத்தில் ஏற்படும் விளைவுகளை அவர்கள் அறியவில்லை எனவும் வருத்தப்படுகின்றனர்…