மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிண்ணிமங்கலம், கொ.புளியங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இதில் வருவாய் வட்டாட்சியர் கிளமெண்ட் சுரேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல்,ஊராட்சி செயலாளர்கள் ஜோதிபாசு, அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் கின்னிமங்கலம் கொக்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.