விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,

அண்ணாமலைக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும் அக்கட்சியும் சேர்ந்து தோல்வியடையும் என்பதால் பஜகவோடு யாரும் கூட்டணி வைக்க தயாராக இல்லை.
கூட்டணி வைக்க கூவி கூவி அழைக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
விஜய் பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக அதிமுகவை கபாலி கரம் செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளது
அதிமுக தற்போது கடைசி தேர்தலை சந்திக்க உள்ளது, அதிமுகவின் கடைசி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அதிமுக என்பதை அமித்ஷா அதிமுக என மாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியை சேரும்.2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு கடைசி தேர்தலாக உள்ளது,
தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவின் இடத்தை நிரப்பும் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது
அந்த பயம் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருக்கிறது.
அதிமுகவிடம் இருப்பது இரட்டை இலை சின்னமும் கட்சி அலுவலகம் மட்டுமே, கட்சியை டெல்லி முதலாளிகளிடம் அடகு வைத்து விட்டனர்.

அதிமுக கட்சிக்கு அமித் ஷா தான் முதலாளி அவர்தான் கட்சியை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தான் எதிரி, தமிழகத்தில் மதவாதம் உள்ளே வரக்கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு
வரும் சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகத்திற்கும் மதவெறிக்கும் எதிரான தேர்தல்.
எம்ஜிஆரின் படங்களை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த செங்கோட்டையன் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை விசில் அடித்து பார்க்கட்டும் வாழ்த்துக்கள்.




