சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது முகாமில் திருவேடகம் தென்கரை மேலக்கால் காடுபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுடைய தேவைகளை மனுக்கள் மூலமாக வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்மாமிற்கு வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

யூனியன் ஆணையாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். திருவேடகம் ஊராட்சி செயலாளர் சுதா பிரியா நன்றி தெரிவித்தார்.இதில்634 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு ஒப்பீகை சீட்டு வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசு துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மின்சார வாரியம், காவல்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், மகளிர் அணி லிங்கராணி வசந்த கோகிலாசிபிஆர் சரவணன், மேலக்கால் சுப்பிரமணி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாபெரியகருப்பன், ஊத்துக்குளி ராஜாராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம், உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.