புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கீழறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்தமுகாமில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை 15 துறை அரசு அதிகாரிகளிடம் வழங்கினர்.

அப்போது மனு கொடுக்க வந்த கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றி உள்ள அனைத்து பொது மக்களுக்கும் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் RRS.மாரிமுத்து சார்பில் அறுசுவை விருந்தை வழங்கி சிறப்பித்த நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவவி.மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது 46 வகையான கோரிக்கை மனுக்களை அமைச்சர் மெய்யநாதன் பெற்றுக் கொண்டு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.