புதுக்கோட்டை ஆக 06- புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் பேரூராட்சியில் “மக்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடந்தது. இதில் 1முதல் 8 வார்டுகளைச்சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர் அரிமழம் பேரூராட்சி செயல் அலுவலர்
ஆர். அண்ணாத்துரை தலைமை வகித்தார்.

பேரூராட்சி தலைவர் மாரிக்கண்னு முத்துக்குமார் வரவேற்று பேசினார்.திருமயம் வட்டாட்சியர் வரதராஜன், சமூக நல பாதுகாப்பு தனி வட்டாட்சியர் பொன் மலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆர். ரேவதி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். 200க்கு மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. பட்டா மாறுதல் இருப்பிட சான்றிதழ், பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம், ஆதார் அட்டையில் திருத்தம் தொடர்பான மனுக்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பல மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்பட்டது.
செங்கீரை பிர்கா வருவாய் ஆய்வாளர் சொ. பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் அரிமழம் சரண்ராஜ், மிரட்டுநிலை அம்பிகா, தேக்காட்டூர் பெலிக்ஸ்ராஜ், பெருங்குடி வீரசிவக்குமார், செங்கீரை ரெங்கசாமி, பனங்குடி ராஜலெட்சுமி, கீழப்பனையூர் பாண்டியராஜன்,அரிமழம் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் முத்துக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்திரமோகன், கணேசன், வீரப்பன், ஒன்றிய திமுக
சுற்றுச்சூழல் அணி தலைவர் சுப்பு, நகரச் செயலாளர் செந்தில்குமார், பேரூர் கழகம் அவைத்தலைவர் செல்லக்கண்னு, கிளைச் செயலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.