மதுரை மாவட்டம் வாலாந்தூர் பகுதியில் தனியார் மஹாலில் நடைபெற்ற செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வாலாந்தூர் சடச்சிப்பட்டி,ஆரியபட்டி,பூதிபுரம், கட்டகருப்பன்பட்டி பொட்டுலுப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாமில் செல்லம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களை ஆய்வு செய்தார்.

நிகழ்வில் உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி,சதீஷ்குமார் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் குராயூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் குராயூர் மருதங்குடி சென்னம்பட்டி ஓடைப்பட்டி உன்னிபட்டி பேய்குளம் எஸ் வெள்ளாங்குளம் வேப்பங்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
நிகழ்வில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மதன்குமார் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேலு, மோகன்ராம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன்,கள்ளிக்குடி வட்டாட்சியர் சிவக்குமார் வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.