மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூராணத்தில் அறிஞர் அண்ணா 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியம் சார்பில், ஒன்றியச் செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த 520 வாக்குறுதிகளில் ஒன்றை கட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.

ஸ்டாலின் அரசு மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவமனை பணியாளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை முடக்கி கைது செய்யும் மக்கள் விரோத ஆட்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், நாகராஜன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இராமு. இளங்கோவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், கருணாகரன், பாசறை மாவட்ட துணைச் செயலாளர் பணக்கரை பிரபு மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
