தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


மருத்துவ முகாமை தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், ஒரத்தநாடு நான்கு பகுதி ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ் குமார், கார்த்திகேயன், முருகையன், செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, விஜய், ஒரத்தநாடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன், தொண்டராம்பட்டு வட்டார மருத்துவர் ராஜராஜன், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கலந்து திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பொய்யுண்டார் கோட்டை, செல்லம்பட்டி, வடக்கூர், சோழபுரம், தெக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் சம்பந்தமான அனைத்துவித பரிசோதனைகளும் செய்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, இதய நோய்க்கான எக்கோ பரிசோதனை, கண் பரிசோதனை, மனநலம் சார்ந்த பரிசோதனை, கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது.




