மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பூர் பகுதியில் கீரனூர் சுண்ணாம்பூர் துவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் வேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லப்பாண்டியன் சௌந்தர் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கிராம நிர்வாக அலுவலர் மந்தகாளை வருவாய் ஆய்வாளர் ஜீனத் ஜெஸ்மி ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யாவீரசெந்தில், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரபிரபு,ஊராட்சி செயலாளர் பொன்னுலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் கீரனூர் சுண்ணாம்பூர் துவரங்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.