தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

முதலில் வீர ஆஞ்சநேயருக்கு சந்தனம் குங்குமம் பன்னீர் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரமும் செய்யப்பட்டது.
மேலும் வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தியும் அருகம்புல் மற்றும் துளசி மாலைகள் அணிவித்தும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இந்த ஜெயந்தி விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு துளசி செந்தூரம்,கேசரி லட்டு வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் வீர ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி ஜக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.




