திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவை சாலையில் உள்ள சின்ன கலையமுத்தூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாகாளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக மங்கல இசை மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு ராமேஸ்வரம் சண்முக நதி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. பின்னர் பட்டு வஸ்திரங்கள் ஹோம திரவியங்கள் புஷ்பங்கள் உள்ளிட்ட பொருட்களால் யாகசாலை வளர்க்கப்பட்டு மூலஸ்தான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
விழாவில் பெத்தநாயக்கன்பட்டி கரடிக்கூட்டம் புஷ்பத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். காலை முதல் மாலை வரை அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.








