• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அடித்தே கொல்லப்பட்ட இலங்கை எம்பி – அதிர்ச்சி தகவல்

ByA.Tamilselvan

May 14, 2022

இலங்கை நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாக பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது . இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீவைத்து எரிக்கப்பட்டது. இதுபோன்றுவன்முறைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
கடந்த மே 9ம் தேதி கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டதில் இரு தரப்பினருக்கும் இடையில் வன்முறை வெடித்தது.அந்த வன்முறையின்போது ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார்.
தனது காரை மறித்த போராட்டக்காரர்களை நோக்கி அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவரை தாக்கியதால் அச்சமடைந்த எம்பி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது இறந்த எம்பி அமரக்கீர்த்தியின் பிரதே பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில் அவர் துப்பாக்கியால் சுட்டு இறக்கவில்லை, போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என தெரிய வந்துள்ளது.போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.