• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மருந்து செலவுக்கான உதவியை நாடும் இலங்கை

மருந்து செலவுக்கான உலக வங்கியிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களை மேலும் வதைத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உலக வங்கியின் உதவியை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் நாடியுள்ளது. அதன் பலனாய் மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்வதற்காக உலக வங்கியில் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் மருந்து பொருட்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மருத்துவத்திற்கான நிதியுதவியை பெற உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியையும் இலங்கை அரசு நாடியுள்ளது. தொடர்ந்து மருத்துவ செலவுக்காக வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் நன்கொடை வழங்குமாறு கேட்டுக் கொண்ட இலங்கை அரசு, சிங்கப்பூர், இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா ஆகிய நாடுகளின் உதவியையும் நாடியுள்ளது.