மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் வைத்து இன்று காலை கோபூஜையுடன் தொடங்கி மாலை குரு வந்தனம் ,ஸ்ரீ ஆதிசங்கரருக்கு பூஜை உபநிஷத் பாராயணம் தீபாராதனை நடைபெற்று தோ டகாஷ்டகம் வழிபாடு நடந்தது.

பரமானந்த மகராஜ் செயலர் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி திருவேடகம் பூஜ்ஸ்ரீ அத்யாத்மானந்த மகராஜ் விவேகானந்தா கல்லூரி திருவேடகம் ஆகியோர் ஆதிசங்கரர் பற்றி உரையாற்றினர் .அனைவரும் நல்ல வழியில் வாழ்ந்து இறையருளை அடைய வேண்டும் என்று ஆசியுரை வழங்கினார்கள்.
கடவுள் இருக்கிறார் என்பதனை ஒரு சிறு கதை மூலமாக சுவாமிஜி எடுத்துரைத்தார். நமது சனாதன தர்மத்தில் இறை நம்பிக்கை மிகவும் முக்கியம். அதற்கு குருவருள் துணை நிற்கும் என்று எடுத்துரைத்தார். நிர்வாகி பொறியாளர் கே ஶ்ரீ குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கட ராமன் ஸ்ரீ வீர மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.